திருவள்ளூரில் தனியார் பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர்: கீழ்ச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம். விவசாயி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா (வயது17). இவர் திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்டனர் அப்போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.விஷ பூச்சி கடித்து மாணவி இறந்துவிட்டதாக பள்ளிநிர்வாகம் கூறியதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

மாணவி இறப்பில் மர்மம் உள்ளது என்று மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டுள்ள மக்களிடம் திருத்தணி வட்டாச்சியர் வெண்ணிலா , டிஎஸ்பி சாரதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.  காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா, திருவள்ளூர் எஸ்பி கல்யாண், சிபிசிஐடி எஸ்.பி. செல்வகுமார் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட தனியார் பள்ளியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்

Related Stories: