இந்திய குடியரசுத் தலைவராக உங்கள் சேவைகளால் நாடு பயனடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்: திரௌபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயக கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையும், பலத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்திய குடியரசுத் தலைவராக உங்கள் சேவைகளால் நாடு பயனடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் 21 குண்டுகள் முழங்க நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் 2வது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் திரௌபதி முர்மு பெற்றுள்ளார். இந்நிலையில், குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Related Stories: