×

இந்தியாவில் எந்த ஒரு ஏழையும் குடியரசுத் தலைவராக முடியும் என்பதற்கு எனது வாழ்வே சான்று :குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேச்சு!!

புதுடெல்லி: நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி, 2வது பெண் ஜனாதிபதி, மிக குறைந்த வயது ஜனாதிபதி என்ற பெருமைகளை அவர் பெற்றுள்ளார். பின்னர் உரை நிகழ்த்திய திரவுபதி முர்மு, பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. குடியரசுத் தலைவராக பதவியேற்றது பெருமை அளிக்கிறது. தன்னை தேர்ந்தெடுத்த எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் புதிய அத்தியாயம். நீங்கள் அனைவரும் என்மீது வைத்த நம்பிக்கையே என் பலம்.நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடே வாக்குகள். ஒடிசாவில் சிறு கிராமத்தில் இருந்து என்பது வாழக்கை தொடங்கியது. ஆதிவாசிகளும் கனவு கண்டு வெற்றி பெற முடியும் என்பதற்கு நானே உதாரணம்.

சுதந்திர இந்தியாவில் பிறந்து குடியரசுத் தலைவர் ஆன முதல் நபர் நான். இந்தியாவில் எந்த ஒரு ஏழையும் குடியரசுத் தலைவராக முடியும் என்பதற்கு எனது வாழ்வே சான்று. பழங்குடியினத்தை சேர்ந்த நான் குடியரசு தலைவர் ஆனது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவம். குடியரசுத் தலைவர் பதவியை அடைந்தது தனிப்பட்ட சாதனை அல்ல.வளர்ச்சிக்கான பாதையில் நாடு செல்ல வழிகாட்டியாக இருப்பேன்.தொலைநோக்கு திட்டம் தயாராகும் வேளையில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள், இளைஞர்கள் நலனில் தனிக்கவனம் செலுத்துவேன்.என்னுடைய உயர்வு, நாட்டின் கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக அமைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெண்கள் மேலும் மேலும் அதிக அதிகாரத்தை பெற வேண்டும் என விரும்புகிறேன்.ஒவ்வொரு துறையிலும் பெண்களுடைய பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து பாரதத்தை கட்டியெழுப்ப முனைப்புடன் செயல்படுவோம்,என்றார்.


Tags : india , India, President of the Republic, Drabupati Murmu
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!