கொசப்பூர் ரேஷன் கடையில் சுதர்சனம் எம்எல்ஏ திடீர் ஆய்வு

திருவொற்றியூர்: மணலி மண்டலம், 17வது வார்டுக்கு உட்பட்ட கொசப்பூர் ரேஷன் கடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக உணவு பொருள் வழங்கப்படுவதில்லை என்று மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர் நேற்று அதிரடியாக கொசப்பூர் ரேஷன் கடைக்கு சென்றனர். அப்போது, அங்கு பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த குடும்ப அட்டைதாரர்களிடம் உணவு பொருட்கள் முழுமையாக வழங்கப்படுகிறதா என்று கேட்டனர். பின்னர், அரசு தேவையான அளவிற்கு உணவு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்வதால் தடையின்றி குடும்ப அட்டைகளுக்கு உணவு பொருள் வழங்க வேண்டும் என்று மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ ரேஷன் கடை அலுவலரிடம் தெரிவித்தார்.

Related Stories: