வேலூரில் காலதாமதமானதால் தேர்வு மையத்திற்குள் சுவர் ஏறி குதித்து நுழைய முயன்ற வாலிபர்: தடுத்து திருப்பி அனுப்பிய போலீசார்

வேலூர்: வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு குரூப் 4 தேர்வு எழுத காலை 9.20 மணியளவில் வந்த வாலிபர், பள்ளியின் கேட் மூடியிருப்பதை பார்த்து, போலீசாரிடம் திறந்துவிடும்படி கேட்டார். அதற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள், தேர்வு மையத்துக்கு 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என்றனர்.இதையடுத்து, அந்த வாலிபர் அங்கிருந்த சைக்கிள் மீது ஏறி சுற்றுச்சுவரை தாண்டி பள்ளி வளாகத்திற்குள் குதித்தார். இதைப்பார்த்து பதற்றமடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து, 9 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் யாருக்கும் அனுமதி இல்லை எனக்கூறி கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். அதேபோல் காலதாமதமாக வந்த மற்றொரு வாலிபர் கேட்டு பூட்டியிருப்பதை பார்த்து தனது ஹால் டிக்கெட்டை அங்கேயே கிழித்து போட்டு விட்டு திரும்பிச்சென்றார்.

Related Stories: