நீரஜ் சோப்ராவுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘மீண்டும் ஒருமுறை வரலாறு படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லும் இரண்டாம் இந்தியர் மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் அவருக்கு என் பாராட்டுகள். உலக அரங்கில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து சாதித்து வரும் உயர் சிறப்பான சாதனைகளால் இந்தியா பெருமையடைகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: