×

விசா வாங்காமல் போய்க்கிட்டே இருக்கலாம் இந்திய பாஸ்போர்ட்டுக்கு 60 நாடுகளில் செல்வாக்கு: முதலிடம் ஜப்பான், கடைசி இடம் ஆப்கான்

புதுடெல்லி: ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு செல்லும் மக்கள், அந்த நாட்டு அரசிடம் விண்ணபித்து முன்கூட்டியே விசா பெற வேண்டும். அப்போதுதான், விமானத்திலேயே ஏற்றுவார்கள். அங்கு குறிப்பிட்ட காலம் தங்கியும் நாடு திரும்பி விட வேண்டும். இல்லை என்றால், ஜெயில்தான். இருப்பினும், இருதரப்பு உறவுகளின் அடிப்படையில், குறிப்பிட்ட நாடுகளின் குடிமக்கள் தங்களுக்கு நாட்டுக்கு முன்கூட்டியே விசா பெறாமல் வரலாம் என்ற சலுகையை பல நாடுகள் அளிக்கின்றன. அங்கு போன பிறகு விமான நிலையத்திலேயே விசா பெறலாம். அதன்படி,  இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு, விசா இல்லாமல் 60 நாடுகளுக்கு செல்ல முடியும்.

உலக நாடுகளுக்கான சர்வதேச பாஸ்போர்ட் தரவரிசையை ‘ஹென்லி’ என்ற பாஸ்போர்ட் குறியீடு அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், மொத்தம் 199 நாடுகளின் பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல் இடம் பெற்றுள்ளது. இதில், ஜப்பான் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு, 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.  சிங்கப்பூர், தென்கொரியா 2வது இடத்தை பிடித்துள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்கள் மூலம், 192 நாடுகளுக்கு செல்லலாம். ஜெர்மனி, ஸ்பெயின் 3வது இடத்தை பிடித்துள்ளன. அமெரிக்கா 7, ரஷ்யா 50, சீனா 69வது இடங்களை பிடித்துள்ளன. இந்தியா 87வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் அண்டை நாடான ஆப்கானிஸ்தான், 199வது நாடாக கடைசி இடத்தை பிடித்துள்ளது.

எந்தெந்த நாடுகள் இந்தியாவில் இருந்து விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியலில் சில:
* ஓசியானியா பகுதியில் உள்ள 9 நாடுகள்.
* மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஜோர்டான், ஓமன், கத்தார்.
* ஐரோப்பியா நாடுகளில் அல்பேனியா, செர்பியா.
* கரீபியன் பகுதி உள்ள 11 நாடுகள்.
* ஆசிய கண்டத்தில் உள்ள பூடான், இலங்கை, நேபாளம் உட்பட 10 நாடுகள்.

Tags : Japan ,Afghan , Indian passport has influence in 60 countries: Japan is the first, Afghanistan is the last
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...