×

டிஎன்பிஎல் கிரிக்கெட் நெல்லை, சேப்பாக், மதுரை, கோவை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி

சேலம்: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் 6வது சீசன் நடந்து வருகிறது. நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளது. நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் என 4 நகரங்களில் லீக் போட்டிகள் நடந்தன. சேலத்தில் நேற்றுடன் லீக் சுற்று முடிவடைந்தது. இத்தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியுடன் நெல்லை அணி 12 புள்ளியோடு பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், மதுரை பேந்தர்ஸ் அணி 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் மூன்றாவது (ரன்ரேட் அடிப்படையில்) இடத்தையும், கோவை கிங்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 4 வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த 4 அணிகளும் பிளேஆப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றன. சேலம் வாழப்பாடி மைதானத்தில் நாளை (26ம் தேதி) எலிமினேட்டர் ஆட்டத்தில் மதுரை பேந்தர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதே மைதானத்தில் 27ம் தேதி நடக்கும் முதல் குவாலிபையர் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடத்தில் உள்ள நெல்லை - சேப்பாக் அணிகள் விளையாடுகிறது. குவாலிபையர்-2 மற்றும் இறுதிப்போட்டி கோவையில் நடக்கிறது.

Tags : TNPL ,Cricket ,Nellai ,Chepauk ,Madurai ,Coimbatore , TNPL Cricket Nellai, Chepauk, Madurai and Coimbatore teams qualify for the play-off round
× RELATED டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது!