பொய்க்கால் குதிரையில் ஒற்றைக்காலுடன் நடித்தார் பிரபுதேவா

சென்னை: ஒற்றைக்காலுடன் பிரபுதேவா நடித்துள்ள படம், ‘பொய்க்கால் குதிரை’. மற்றும் வரலட்சுமி, ஜான் கொக்கேன், ஜெகன், பரத், பேபி ஆரியா நடித்துள்ளனர். பல்லு ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பிரபுதேவா பேசியதாவது: இதுவரை நிறைய படங்களில் ஜாலியாக நடித்துவிட்டேன். இப்போது எனக்கு வயது கூடி பக்குவம் ஏற்பட்டு இருப்பதால், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன்.

‘மைடியர் பூதம்’ படத்தில் மொட்டை அடித்துக் கொண்டு பூதமாக நடித்தேன். திரில்லர் கதை கொண்ட ‘பொய்க்கால் குதிரை’ படத்தில் ஒரு கால் இழந்தவனாக நடிக்கிறேன். அந்த ஒரே காலுடன் நடனமாடி, சண்டைக் காட்சியிலும் நடித்துள்ளேன். இது மிக கடினமாக இருந்தது என்றாலும் கூட விரும்பியே பணியாற்றினேன். இதன் டைரக்டர் வேறுமாதிரியான படங்களை இயக்கியதாக சொன்னார்கள். யாரையும் நான் மதிப்பீடு செய்வதில்லை. அவர் சொன்ன கதை பிடித்ததால் ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பில் ஒரு இயக்குனருக்கு தேவையான ஆளுமைத்திறன் அவரிடம் இருந்தது. விரைவாக படப்பிடிப்பு நடத்தி, என்னிடம் இருந்து மாறுபட்ட நடிப்பை வெளியே கொண்டு வந்தார்.

Related Stories: