மாநிலங்களவை எம்பி.யாக இளையராஜா இன்று பதவியேற்பு

சென்னை: பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா, சமீபத்தில் மாநிலங்களவை நியமன எம்பி.யாக ஜனாதிபதி மூலம் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் பாஜ சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், மாநிலங்களவை எம்பி.யாக இளையராஜா இன்று பதவி ஏற்றுக்கொள்கிறார். பிறகு பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. இதற்காக நேற்று மாலை இளையராஜா டெல்லி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories: