கல்வராயன்மலையில் சாரல் மழை; பெரியார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து துவங்கியது: சுற்றுலா பயணிகள் ஆர்வம்

சின்னசேலம்: கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சியில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக சாரல்மழை பெய்து வருவதால் பெரியார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து துவங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் பெரியார் நிர்வீழ்ச்சி, மேகம், செருக்கல், கவ்வியம், எட்டியாறு போன்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளது. இதில் செருக்கலாறு, கவ்வியம், மேகம் நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று குளிப்பதற்கு ஏற்ற வகையில் இல்லை. போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. ஆனால் பெரியார் நீர்வீழ்ச்சியில் சில அடிப்படை வசதிகள் உள்ளது. அதாவது உடை மாற்ற, குளிக்க என வசதிகள் உள்ளது. இதனால் இந்த நீர்வீழ்ச்சிக்கு கடலூர், விழுப்புரம், புதுவை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  இந்த நீர்வீழ்ச்சியில் கடந்த சில தினங்களாக மிக மிக குறைந்த அளவே நீர்வரத்து இருந்தது.

இந்நிலையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக மலையில் விட்டு விட்டு இடி மின்னலுடன் சாரல் மழை பெய்து வருகிறது. தற்போதுகூட இடி மின்னல் தாக்கி இரு மாடுகள் இறந்து விட்டது. இதனால் பெரியார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இனிமேல் மழை காலம் நெருங்க உள்ளது என்பதால் கல்வராயன்மலை நீர்வீழ்ச்சிகளில் தொடர்ந்து நீர்வரத்து இருக்க வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories: