அரசுப்பள்ளி கழிப்பிடத்தில் 4ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: மத்திய பிரதேசத்தில் கொடுமை

போபால்: போபால் அருகே அரசுப்பள்ளி கழிப்பிடத்தில் 4ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபால் அடுத்த கோஹெஃபிசாவில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த 8 வயது மாணவி ஒருவர், பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பிடத்திற்கு சென்றார். அப்போது அந்த கழிப்பிடத்திற்குள் மறைந்திருந்த ஒருவன், அந்த மாணவியை கழிப்பிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தான். பின்னர் அங்கிருந்து வெளியே வந்த மாணவி அழுது கொண்டே வகுப்பறைக்கு சென்றார்.

அவரிடம் பள்ளி ஆசிரியை விசாரித்த போது, மாணவி கூறியதை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதற்கிடையே பள்ளி வளாகத்தின் கழிப்பிடத்திற்குள் இருந்த குற்றவாளி தப்பிவிட்டான் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மாணவியிடம் வாக்குமூலம் ெபேற்ற போலீசார் குற்றம் சாட்டப்பட்ட லக்ஷ்மிநாராயண் தனக் என்பவனை கைது செய்தனர். விசாரணையில் கைதான குற்றவாளி, பள்ளியில் பணியாற்றும் பெண் துப்புரவு தொழிலாளியின் கணவர் என்பதும், அவர் தனது மனைவியை பார்க்கும் சாக்குபோக்கில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிவவந்தது. கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உட்பட இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: