திரைப்பட பாணியில் மும்பையில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய 2 பேர் கைது

திருவாரூர்: திருவாரூரை சேர்ந்த ஹாஜி என்பவர் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். அப்போது இவருக்கு திருவாரூர் மஜித் தோப்பை சேர்ந்த அவுரங்கசீப்புடன்(36) பழக்கம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து அவுரங்கசீப்பை சென்னையில் உள்ள ஒரு செல்போன் விற்பனை கடையில் பணிக்கு ஹாஜி சேர்த்து விட்டார். தங்கம் கடத்தலில் ஹாஜி ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு அவுரங்கசீப் உடந்தையாக இருந்து வந்தார்.

இந்தநிலையில் தெலங்கானாவை சேர்ந்த சங்கர், அவுரங்கசீப் ஆகியோரை தங்கம் கடத்தி வருவதற்காக மும்பைக்கு ஹாஜி அனுப்பினார். அங்கு தமிழ் திரைப்படமான அயன் பட பாணியில் தெலங்கானாவை சேர்ந்த சேர்ந்த சங்கரிடம் 2 மாத்திரைக்குள் தங்கத்தை மறைத்து விழுங்க செய்து சென்னைக்கு கடத்தி வந்தனர். இதைதொடர்ந்து சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சங்கரை ஸ்கேன் செய்து பார்த்தபோது ஒரு மாத்திரை மட்டுமே இருந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சமாகும். அதன்பிறகு இன்னொரு மாத்திரை எங்கே என்று ஹாஜி கேட்டார். அதற்கு எனக்கு தெரியாது என்று சங்கர் தெரிவித்தார்.

இதனால் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சங்கர் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது அவரது வயிற்றில் மாத்திரை இல்லை. இதையடுத்து சங்கரை ஹாஜியின் கும்பலை சேர்ந்த திருவாரூர் புறா விஜய், காரைக்கால் தியாகு உட்பட 3 பேர் சேர்ந்து தாக்கி துன்புறுத்தினர். இதையடுத்து தன்னை ஒரு கும்பல் அடித்து மிரட்டுவதாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை டாக்டரிடம் சங்கர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் தனது கணவரை காணவில்லையென மும்பை போலீஸ் நிலையத்தில் சங்கரின் மனைவி புகார் செய்தார். மேலும் மும்பை போலீசுக்கு தனியார் மருத்துவமனை டாக்டரும் தகவல் தெரிவித்தார். இதைதொடர்ந்து சங்கரின் மொபைல் நம்பரை மும்பை போலீசார் கண்காணித்து வந்தனர். இதையடுத்து திருச்சியில் இருந்து திருவாரூருக்கு சங்கரை ஹாஜி கும்பல் கடத்தி செல்வது தெரிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டனர். போலீசார் வரும் தகவல் தெரிந்ததும் கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் தப்பியோடி விட்டனர்.

இதைதொடர்ந்து திருவாரூருக்கு சென்று தங்க கடத்தலில் ஈடுபட்ட அவுரங்கசீப்பையும், திருவாரூர் விளமலில் விஜயையும் மும்பை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து திருவாரூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தி மும்பையில் விசாரணை நடத்த அனுமதி பெற்று 2 பேரையும் போலீசார் அழைத்து சென்றனர். மேலும் தலைமறைவான ஹாஜியை ேதடி வருகின்றனர்.

Related Stories: