ஹர்திக் போல் ஷர்துல்தாகூர் முழுமையான ஆல்ரவுண்டர் இல்லை: ஸ்காட் டைரிஸ் சொல்கிறார்

மும்பை:இந்திய கிரிக்கெட் அணியில் பேட்டிங், பவுலிங் இடத்திற்கும் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் இடத்திற்கு ஹர்திக் பாண்டியாவிற்கு போட்டியே இல்லை. அவரைத்தவிர தரமான வேறு ஆல்ரவுண்டர் இல்லை.

மித வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். ஷர்துல் தாகூர் முக்கியமான போட்டிகளில், குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக அபாரமாக பேட்டிங் ஆடி வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார். இந்நிலையில் ஷர்துல் தாகூர், தனது பேட்டிங் திறமையை நிரூபித்ததன் விளைவாக அவரும் ஒரு ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக பார்க்கப்படுகிறார். இதனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வளிக்கப்பட்டதால் ஷர்துல் தாகூர் தான் ஆல்ரவுண்டராக எடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறுகையில், ``ஷர்துல் தாகூர் பேட்டிங் ஆடுவார் என்பது அவருக்கு கூடுதல் பலம். அவர் டெஸ்ட் போட்டிகளில் சில மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார்.

ஆனால் ஹர்திக் பாண்டியா மாதிரி ஷர்துல் தாகூர் ஒரு முழுமையான ஆல்ரவுண்டர் இல்லை. ஒரேமாதிரியான 2 வீரர்கள் அணியில் தேவையா? ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இருக்கும்போது, அவருக்கு நிகரில்லாத ஷர்துல் தாகூர் தேவையில்லை. ஹர்திக் பாண்டியாவுடன் ஷர்துல் தாகூருக்கு போட்டியில்லை. ஹர்திக் பாண்டியா ஆடாத போட்டிகளில் மாற்று ஆல்ரவுண்டருக்கான இடத்திற்குத்தான் தாகூர் போட்டி போடுகிறார்’’ என்று ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: