என் குப்பை என் பொறுப்பு திட்டத்தில் பொள்ளாச்சியில் தூய்மை பணி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட குறிப்பிட்ட வார்டுகளில் சனிக்கிழமை தோறும் துய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சார்பில், பல்வேறு  இடங்களில் சுகாதார பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் நேற்று நடந்த தூய்மை  நகருக்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு  திட்டத்தின் கீழ் பல்லடம் ரோடு, ஆர்ஆர் தியேட்டர் ரோடு, ஏபிடி ரோடு, லிங்கையன் வீதி, குமரன்நகர், பிஎன்ஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் அனைத்து இடங்களிலும் பணி மேற்கொண்ட தூய்மை பணியாளர்கள் பெரும்பாலானோர்  ரிப்ளை வசதியுடன் கூடிய ஒரே நிறத்தில் சீருடை அணிந்து சுகாதாரப்பணி  மேற்கொண்டு அனைவரையும் வியக்க வைத்தனர்.

மேலும் பல்வேறு இடங்களில், புதர்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை  அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், மகாலிங்கபுரத்தில் உள்ள  எஸ்ஆர்எம்எச்எஸ் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.  நிகழ்ச்சிகளுக்கு நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கி  துவக்கி வைத்தார். நகராட்சி  ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் துரைபாய், பழனிசாமி, இளமாறன், டெஸ்டிபாலு உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

Related Stories: