பழநி வழித்தடத்தில் திருப்பதிக்கு ரயில் சேவை : ரயில் உபயோகிப்போர் சங்கம் கோரிக்கை

பழநி :பழநியில்  ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் சிறப்பு கூட்டம் நடந்தது. சங்க தலைவர்  முருகானந்தம் தலைமை வகிக்க, செயலாளர் பச்சமுத்து வரவேற்றார். கவுரவ தலைவர்  ஹரிஹரமுத்து, கவுரவ செயலாளர் பெருமாள்நாதன் முன்னிலை வகித்தனர். விழாவில்  கிணத்துக்கடவு- பொள்ளாச்சி ரயில் நிலையங்களை மீண்டும் மதுரை கோட்டத்துடன்  இணைக்க வேண்டும்.

பழநி- ஈரோடு அகல ரயில்பாதை திட்டத்தை மீண்டும்  செயல்படுத்த வேண்டும். மேட்டுப்பாளையம்- பொள்ளாச்சி- திண்டுக்கல்- திருச்சி  வழித்தடத்தில் சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும்.  மேட்டுப்பாளையம்- பொள்ளாச்சி- திருச்சி- தஞ்சாவூர்- தாம்பரம் வழியாக இரவு  நேர ரயில் இயக்க வேண்டும். மேட்டுப்பானையம்- பழநி வழித்தடத்தில்  ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்க வேண்டும்.

மேட்டுப்பாளையம்- பழநி- ராமேஸ்வரம்  ரயில் இயக்க வேண்டும். கோவை- திண்டுக்கல் வழித்தடத்தில் சாதாரண ரயில்  இயக்க வேண்டும். பழநி வழித்தடத்தில் திருப்பதிக்கு ரயில் இயக்க வேண்டும்.  புதுதாராபுரம் சாலையில் ரயில் தடத்தை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: