தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை; தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்ட வருகிறது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட அமைச்சர்  மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை. தமிழகத்தில் குரங்கு அம்மை நுழையாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. முகத்தில் சிறு கொப்புளங்கள் இருந்தால் அருகில் இருக்கும் மருத்துவமனைகளை மக்கள் அணுக வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பொதுமக்கள் தயக்கம் காட்டக்கூடாது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் வீரர்கள் தங்குவதற்கு 24 விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. செஸ் போட்டியில் பங்கேற்க சென்னை வரும் வீரர்களுக்கு கொரோனா மற்றும் குரங்கு அம்மை நோய் பரிசோதனை செய்யப்படும் என கூறினார்.

செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலில் பிரதமர் மோடி படம் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர்; செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடல் வீரர்களை வரவேற்பதற்கான பாடல், பிரதமரை வரவேற்பதற்கான பாடல் அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: