×

19 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பதக்கம்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா..!

ஓரிகான்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். அமெரிக்காவில் ஓரிகான் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. முன்னதாக நடந்த ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ரோகித்தும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். இந்நிலையில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. அதில்; 88.13 மீட்டர் தூரம் எரிந்து நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.40 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற நீரஜ் உலக தடகளத்தில் வெள்ளி வென்றுள்ளார். 19 ஆண்டுகளுக்குப் பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பதக்கம் வென்றது இந்தியா. 2003ம் ஆண்டு அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்ற பிறகு 19 ஆண்டுகளாக இந்தியா பதக்கம் பெறாமல் இருந்தது. உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது.


Tags : India ,Neeraj Chopra ,World Athletic Championship Series , India medal after 19 years: Neeraj Chopra wins silver medal in javelin throw at World Athletics Championships..!
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!