×

தமிழுக்கு 10 தேசிய விருதுகள்: ரஜினி, கமல் வாழ்த்து

சென்னை: தமிழ் சினிமாவுக்கு 10 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. தேசிய விருதுக்கு தேர்வான அனைவருக்கும் பல்வேறு தரப்பினர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் தங்களது டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவில், ‘தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும், ‘சூரரைப்போற்று’ பட இயக்குனர் மற்றும் விருது பெறும் திரையுலக கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்’ என்று தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில்,  ‘சூரரைப்போற்று’ திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’, ‘மண்டேலா’ என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி, தேசத்தை திரும்பிப் பார்க்க செய்துள்ளது தமிழ் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.

Tags : Rajini, ,Kamal , 10 National Awards for Tamil: Congratulations to Rajini, Kamal
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...