தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் ஆவடி மாநகராட்சியில் தீவிர தூய்மை பணிகள்; அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற திட்டம் மூலம் தீவிர தூய்மை பணி நேற்று நடந்தது. பருத்திப்பட்டு பூங்காவில் தீவிர தூய்மை பணியை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று தொடங்கி வைத்து, தூய்மை உறுதிமொழி ஏற்றார். இதில், செந்நீர்குப்பம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள், மகளிர் குழுக்கள், எக்ஸ்னோரா உறுப்பினர்கள், லாரன்ஸ் நகர் அசோசியன் மற்றும் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என 500 பேர் ஈடுபட்டனர். மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ், ஆவடி மேயர் ஜி.உதயகுமார், மண்டல குழு தலைவர் ஜி.ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ஜாபர், 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் மீனாட்சி குமார், 38வது வார்டு கோகிலா சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: