செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் பதவியேற்பு விழா: முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

செங்கல்பட்டு: வித்யாசாகர் குளோபல் பள்ளியில் மாணவர்கள் பதவியேற்பு விழாவில்  முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் நேற்றுமுன்தினம் மாணவர்களுக்கான பதவி ஏற்பு விழா பகவான் மஹாவீர் சுவாமி அரங்கத்தில் நடைபெற்றது. இதில், தனியார்மென்பொருள் கம்பெனி நிர்வாகி வினோத் வெங்கடேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பள்ளி மாணவத் தலைவர் அருண் அனைவரையும் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் பள்ளியில் நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் தலைவர், விளையாட்டு துறையின் தலைவர்கள் ஆகியோருக்கு கொடிகள், பதக்கங்கள் மற்றும் பதவிகளை வழங்கினார். இறுதியாக பள்ளி மாணவத் தலைவி திவ்யா நன்றி கூறினார். இவ்விழாவில், வித்யாசாகர் கல்வி குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா பொருளாளர் சுரேஷ் கன்காரியா, வித்யாசாகர் குளோபல் பள்ளி முதல்வர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: