சென்னை - பாண்டிச்சேரி செல்லும் பஸ் நிறுத்தத்தில் புராதன சின்னங்கள் வடிவமைப்பு பணிகள் தீவிரம்

மாமல்லபுரம்: சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி, சென்னை- பாண்டிச்சேரி செல்லும் பயணிகளுக்கான அமைக்கப்பட்ட, பஸ் நிறுத்தத்தில் புராதன சின்னங்கள் இடம் பெறும் வகையில், அழகுர வடிவமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஒட்டி, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை நுழைவு வாயிலில் உள்ள பஸ் நிறுத்தம், வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட பல்லவர் சிற்பங்கள் இடம் பெறும் வகையிலும், வீரர்களை கவரும் வகையிலும் அழகுர வடிவமைப்பட்டு வருகிறது. மேலும், இப்போட்டி நடைபெறுவதை முன்னிட்டு மாமல்லபுரம் நகரம் முழுவதும் அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், மாமல்லபுரம் இசிஆர் நுழைவு பகுதியில் சென்னை - பாண்டிச்சேரி செல்லும் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பஸ் நிறுத்தத்தில், செஸ் ஒலிபியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு தற்போது அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த, பஸ் நிறுத்தத்தின் மேற்கூரை புராதன சின்னம் வடிவில் பைபர் (பிளாஸ்டர் பேரிஸ்) காகித கூழ் கலவையை கொண்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள, ஓட்டல்கள், ரிசார்ட்கள், தங்கும் விடுதிகளில் தங்கும் வெளிநாட்டு செஸ் வீரர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடந்து, போட்டி நடைபெறும் போர் பாயிண்ட்ஸ் - செரட்டான் ரிசார்ட்டுக்கு செல்லும்போது அவர்களை கவரும் வகையில், இந்த பஸ் நிறுத்தம் மாமல்லபுரம் வரலாற்று சிறப்புமிக்க புராதன சின்னங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த பஸ் நிறுத்தம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

Related Stories: