தேசிய திரைப்பட விருது பெற்ற தமிழ் திரைப்பட துறையினருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: தேசிய திரைப்பட விருது பெற்ற தமிழ் திரைப்பட துறையினருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய சினிமா துறையில் 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதாக கருதப்படுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த 3 படங்கள் 10 தேசிய விருதை பெற்று இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது, மகிழ்ச்சிக்குரியது. தேசிய திரைப்பட விருதிற்காக பல்வேறு மொழிகளில் வெளியான 295 திரைப்படங்கள் பங்கேற்ற நிலையில் தமிழ் திரைப்படங்கள் மூன்றிற்கு 10 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது தமிழ் திரையுலகிற்கு கிடைத்த சிறந்த அங்கிகாரம் ஆகும். விருது பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்துகள். வருங்காலங்களில் தமிழ் திரைப்பட துறையினர் இன்னும் பல விருதுகளை பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: