×

இந்தியா உட்பட 75 நாடுகளில் பரவியது குரங்கம்மை நோய்; உலக அவசரநிலை: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

ஐநா: சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ், கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர்ச் சேதத்தையும், பொருளாதார நாசத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதில் இருந்து மீள்வதற்காக உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன் ஆப்பிரிக்க நாடுகளில்  பரவிய குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதை உலக சுகாதார அவசர நிலையாக அறிவிப்பது பற்றி கடந்த ஒரு மாதமாகவே உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்தி வந்தது. ஆனால், அதற்கான அபாயகரமான சூழல் இன்னும் ஏற்படவில்லை என்று கடந்த வாரம் கூட தெரிவித்தது. இந்நிலையில், இந்த நோய் தற்போது இந்தியா உட்பட 75 நாடுகளில் பரவி விட்டது. 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். 5 பேர் பலியாகி உள்ளனர். இது மேலும் பல நாடுகளுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதால், இந்த நோயை உலக சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு நேற்று  அறிவித்தது. இந்நோயை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும்,  குறிப்பாக, ஓரினச்சேர்க்கையாளர்களை கண்காணிக்கும்படியும் இந்த  அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரஸ் அதனோம் ஜெப்ரியாசிஸ் எச்சரித்துள்ளார்.

Tags : India ,World Health Organization , Monkey disease spread to 75 countries including India; A global emergency: World Health Organization declaration
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...