×

அரியலூரில் வாகன தணிக்கையின் போது ரூ.50 லட்சம் மதிப்பிலான 5 டன் குட்கா பறிமுதல்

அரியலூர்: அரியலூரில் பழையத்துணி என்று சொல்லி கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான 5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் சிலகால் என்ற இடத்தில் காப்பலூர் காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது, ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து கும்பகோணம் நோக்கி லாரி ஒன்று சென்றது. அதனை கண்ட காவல் ஆய்வாளர் லாரியை சோதனை செய்ய முற்படும்பொழுது, லாரி ஓட்டுநர் லாரியை வேகமாக இயக்கி, சாலையில் சென்ற நாயின் மீதும் மோதிவிட்டு, நிற்காமல் சென்றுள்ளார். இதனைக்கண்டு சந்தேகமடைந்த போலீசார், உடனடியாக லாரியை பின்தொடர்ந்து வழிமறித்து, ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டார்.

லாரியில் என்ன கொண்டு போகிறீர்கள்? என்னனென்ன பொருட்கள் உள்ளது? எனக் காவலர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, வண்டியில் பழையத்துணிகளை கொண்டு செல்வதாக கூறிய ஓட்டுனரிடம், பொருட்களுக்கான லைசென்ஸை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் சந்தேகம் வலுத்த நிலையில், போலீசார் லாரியில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அதில் ஏறக்குறைய 5 டன் எடையுடைய சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்.      


Tags : Ariyalur , Ariyalur, vehicle inspection, Rs.50 lakh, 5 ton Gutka, seized
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...