×

இன்று அதிகாலை ‘கன்வர்’ யாத்திரையின் போது 6 பக்தர்கள் விபத்தில் பலி

புதுடெல்லி: உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் சிவ பக்தர்களின் ‘கன்வர்’ யாத்திரை நடைபெற்று வருகிறது. கங்கை நதி கரைகளுக்கு யாத்திரையாக சென்று புனித நீர் எடுத்து வந்து தங்கள் சொந்த ஊர் மற்றும் வீட்டில் உள்ள சிவன் சிலைக்கு அபிஷேகம் செய்வர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து ‘கன்வர்’ யாத்திரை புறப்பட்ட பக்தர்களில் 6 பேர், உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை கடந்த போது லாரி மோதிய விபத்தில் பலியாகினர். மேலும் மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஆக்ரா போலீஸ் அதிகாரி ராஜீவ் கிருஷ்ணா கூறுகையில், ‘இன்று அதிகாலை 2.15 மணியளவில் ஹத்ராஸ் அடுத்த சதாபாத் பகுதியில் கன்வர் யாத்திரை பக்தர்கள் நடந்து சென்றனர். அவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர்; ஒருவர் படுகாயமடைந்தார். அவர்கள் ஹரித்வாரில் இருந்து குவாலியருக்குச் சென்று கொண்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Tags : 6 devotees died in an accident during 'Kanwar' Yatra this morning
× RELATED காவி நிறத்தில் மாறிய தூர்தர்ஷன் லோகோ எதிர்க்கட்சியினர் கண்டனம்