டெல்லி ரயில் நிலையத்தில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லி ரயில் நிலையத்தின் நடைமேடை பகுதியில் மின் பராமரிப்பு பணியாளர்களின் குடியிருப்பு உள்ளது. அப்பகுதியில் ரயில்வே மின்துறை ஊழியர்கள் பணியாற்றினர். அப்போது குடிசையில் இருந்த 30 வயதான இளம்பெண்ணை, ரயில்வே மின்துறை ஊழியர்கள் 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே டிசிபி ஹரேந்திர சிங் கூறுகையில், ‘வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் ரயில் நிலைய நடைமேடை பகுதியில் அமைந்துள்ள மின் பராமரிப்பு ஊழியர்களின் குடிசையில் 30 வயதான பெண்ணை ரயில்வே மின்துறை ஊழியர்கள் 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதையடுத்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

Related Stories: