×

சித்தூர் விக்ஞான கிரி மலையில் உள்ளமுருகன் கோயிலில் இன்று ஆடிக்கிருத்திகை விழா

*பக்தர்களுக்கு சிறப்பான ஏற்பாடு

*அறங்காவலர் சீனிவாசலு தகவல்

ஸ்ரீகாளஹஸ்தி : திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயிலான விக்ஞான மலை மீதுள்ள ஸ்ரீ வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடி கிருத்திகை பிரம்மோற்சவத்தில் நேற்று (22.7.2022) பரணி நட்சத்திரம் என்பதால் பக்தர்கள் ‘‘பூ” காவடி சுமந்துக் கொண்டு ‘‘அரோகரா.. அரோகரா...’’ என்று முருகப்பெருமானின் திருநாமத்தை முழங்கி சுவாமியை தரிசனம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி கொண்டனர்.

அப்போது, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு மேற்பார்வையிட்டதோடு பக்தர்களிடம் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.  இதன்பின், அஞ்சூரு தாரக சீனிவாசுலு பேசியதாவது:-ஆடிக் கிருத்திகை  பிரம்மோற்சவத்தில் 22-ம் தேதி பரணி, 23-ம் தேதி (இன்று) ஆடி கிருத்திகை, 24-ஆம் தேதி தெப்போற்சவம் 25-ம் தேதி சுவாமி அம்மையார்களின் திருக்கல்யாண உற்சவம் விக்ஞானகிரி மலை அருகில் நடத்தப்படும். கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்று பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாண்டு  பக்தர்களை அனுமதித்ததால் ஸ்ரீகாளஹஸ்தி நகரின் மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இன்று வர வாய்ப்பு உள்ளது. எனவே, அதற்கு தகுந்தார் போல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம்.

பக்தர்கள் நெரிசலை கவனத்தில் கொண்டு தள்ளுமுள்ளு ஏற்படாமல் பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு வரிசைகளை ஏற்பாடு செய்துள்ளோம். பக்தர்கள் கோயிலுக்கு வர  ஸ்ரீகாளஹஸ்தி அரசு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு வழியிலும்  வழக்கம் போல் பக்தர்கள் வரும் மற்றொரு (பழைய)வழியிலும்   விக்ஞான மலை மீது பக்தர்கள் வர தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

 விஞ்ஞான மலை முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்திருப்பது பக்தர்களின் கண்  கவறும் வகையில் உள்ளது. இதேபோல் வரும் 24-ம் தேதி கோயில் அருகில் உள்ள நாரத புஷ்கரணியில் தெப்போற்சவம் நடக்க உள்ளதால் அதற்குண்டான அனைத்து ஏற்பாடுகளான குளத்தையும் அதன் சுற்றியுள்ள பகுதியையும் சுத்தப்படுத்தப்பட்டு ளத்தில்  நீரை நிரப்பி வைத்துள்ளோம். ஆடிக்கிருத்திகை அன்று (கல்யாண கட்டா) முடி காணிக்கை கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, (புஷ்கரணியில்) குளத்தில் பக்தர்கள் புனித நீராட தண்ணீர் குழாய்களை ஏற்பாடு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Chittoor Vignana Giri Hill Murugan Temple ,Atadikruthikari , Srikalahasti : Sri Valli-Theiwanai Sametha Subramanya on Vignana Hill, Sub Temple of Srikalahasti Shiva Temple, Tirupati District
× RELATED உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராம்தேவ்