கொடைக்கானலில் மாற்று படகு இல்லம் -நகராட்சி அமைக்கிறது

கொடைக்கானல் : கொடைக்கானல்  நகராட்சி சார்பில் செயல்படும் படகு இல்லம்  புதுப்பிக்கப்பட உள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில்  இந்த படகு இல்லத்திற்கு பதிலாக கொடைக்கானல் கிரீன்  ஏக்கர்ஸ் ரிசார்ட்ஸ் அருகில் மாற்று படகு இல்லம் அமைக்கும் பணி நடைபெற்று  வருகிறது.

 இந்த மாற்று படகு இல்ல பணிகள் முடிவடைந்த உடன் ஏற்கனவே  செயல்பட்டு கொண்டிருக்கும் நகராட்சி படகு இல்லம் புதுப்பிக்கும் பணி  தொடங்கும். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மாற்று படகு இல்லம் அமைக்கும் பணி  விரைவாக நடந்து வருகிறது. எனவே நகராட்சி படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா  பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருப்பதற்காக மாற்று படகு இல்லத்தில் போதிய  வசதிகளுடன் படகுகள் இயக்கப்படும். இத்தகவலை கொடைக்கானல் நகர் மன்ற தலைவர்  செல்லத்துரை தெரிவித்தார்.

Related Stories: