×

மயிலாடும்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் 3 ஆடு, ஒரு கன்று குட்டி பலி

வருசநாடு : மயிலாடும்பாறை அருகே சிறுத்தைப்புலி கடித்ததில் 3 ஆடுகள், ஒரு கன்று குட்டி இறந்தன. பசுமாடு ஒன்று உயிருக்கு போராடி வருகிறது.மயிலாடும்பாறை அருகேயுள்ள மந்திச்சுனை கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு சொந்தமான தோட்டம் கிராம எல்லையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில், அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து இவரது தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தைபுலி ஒன்று, அங்கிருந்த 3 ஆடுகள், ஒரு கன்றுக்குட்டி மற்றும் ஒரு பசுமாட்டை தாக்கியது.

இதில் 3 ஆடுகள், ஒரு கன்றுக்குட்டி இறந்தது. பசுமாடு காயமடைந்தது. பின்னர் சிறுத்தைப்புலி அங்கிருந்து வனப்பகுதிக்கு ெசன்றுவிட்டது.காலையில் அங்கு வந்த ராமகிருஷ்ணன் கால்நடைகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்த தகவலறிந்து அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்குவதுடன், சிறுத்தைபுலி கூண்டு வைத்து பிடித்து, அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தேனி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mayiladumparai , Varusanadu: 3 goats and a calf died after being bitten by a leopard near Mayiladumparai. A cow is fighting for its life
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு