×

ஓ.பி.ரவீந்திரநாத் நீக்கம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஓபிஎஸ் கடிதம்...!!

சென்னை: ஓ.பி.ரவீந்திரநாத் எம்பியை அதிமுக உறுப்பினராக கருத வேண்டாம் என்ற ஈபிஎஸ் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஓ.பி.ரவீந்திரநாத்தை கட்சியை விட்டு நீக்கியிருப்பதால் அவர் அதிமுக எம்.பி இல்லை என்றும், தன்னிச்சையான எம்.பியாக அறிவிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி மக்களவை சபாநாயருக்கு கடிதம் எழுதினார். அதில், ஒ.பி.ஆர். கட்சிக்கு துன்பம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டதால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எனவே, அவரை அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக எடுத்துக்கொள்ளக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. எடப்பாடி பழனிசாமியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு, ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் நேற்று எதிர் கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்நிலையில், இன்று ஓபிஎஸ், மக்களவை சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், கடந்த 11ம் தேதி தன்னைதானே ஒருங்கிணைப்பாளர் என கருதி, சில குறிப்பிட்ட அதிமுக நிர்வாகிகளால் நடத்தப்பட்ட செயற்குழுமன்ற பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் ஈபிஎஸ் என அதில் குறிப்பிட்டார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என கூறி வரும் ஈபிஎஸ்,  ஒபிஆர்-க்கு எதிராக அளிக்கப்பட்ட கடிதத்தை ஏற்கக்கூடாது; அதனை நிராகரிக்க வேண்டும் என அதில் தெரிவித்தார். ஒபிஆர் தொடர்ச்சியாக அதிமுகவின் உறுப்பினராகவே செயல்படுகிறார். எனவே, எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ஓபிஎஸ் வலியுறுத்தினார். ஏனென்றால், இந்த பொதுக்குழு வழக்கானது, உச்ச, உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தில் இருக்கிறது. மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டுள்ளோம். எனவே அவர் கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என மக்களவை சபாநாயாகர் ஓம் பிர்லாவிற்கு அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.     


Tags : OPS ,Lok Sabha ,Speaker ,Om Birla ,OP ,Rabindranath , OP Rabindranath, Lok Sabha Speaker, Om Birla, OPS, letter
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...