×

கிராமம் முழுக்க கதறல் சத்தம்!: சொந்த ஊரான பெரிய நெசலூரில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் கண்ணீருடன் தொடங்கியது..!!

கடலூர்: சொந்த ஊரான பெரிய நெசலூரில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் தொடங்கியது. மாணவி ஸ்ரீமதி உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. வெளியூர் ஆட்கள் அனுமதிக்கப்படாத நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடக்கிறது. இறுதி சடங்கில் உள்ளூர் மக்கள், உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரியநெசலூரில் வெளியூரை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மயானத்திற்கு செல்லும் வழியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.

கிராம எல்லையில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் மாணவியின் கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர். மாணவியின் உடலை கண்டு உறவினர்கள், ஊர்மக்கள் கதறி அழும் காட்சிகள் காண்போரையும் கண்கலங்க செய்தது. ஸ்ரீமதியின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மாணவியின் தந்தை ராமலிங்கம் கூறியுள்ளார். தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி கடந்த 13ம் தேதி மரணமடைந்தார். மாணவி மரணத்தில் மர்மம் இருந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவால் மாணவியின் உடல் மறுகூறாய்வு செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.


Tags : Srimati ,Great Nessalur , Periya Nesalur, Manavi Smt., Final Procession
× RELATED கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி...