எண்ணூரில் பரபரப்பு: ரவுடி வெட்டிக்கொலை

திருவொற்றியூர்: எண்ணூர்  சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் உமர் பாஷா (22). பீரோ ரிப்பேர் வேலை செய்து வந்தார். இவர், நேற்று இரவு பாரதியார் நகர் 5வது தெருவில்  நடந்து சென்றபோது, அங்கு பைக்கில் வந்த  மர்ம நபர்கள், உமர் பாஷாவை சுற்றிவளைத்து, அளிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.  இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக  உயிரிழந்தார். தகவலறிந்து வந்த எண்ணூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் மீது அடிதடி, போன்ற சில வழக்குகள் உள்ளது. இதனால், முன்விரதம் காரணமாக  உமர் பாஷாவை கொலை செய்தார்களா, கொலை செய்தது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: