காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் வடமாநில தொழிலாளி பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். பீகார் மாநிலம் கட்டோரியா மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் சாந்தி (50). காஞ்சிபுரத்தை அடுத்த மாங்கால் கூட்ரோடு பகுதியில் தங்கி டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த வாரம் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு ஜூலை 19ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு தனது நண்பர் பூரன் மண்டல் (39) என்பவருடன் சென்னைக்கு ரயிலில் வந்துள்ளார்.

அங்கிருந்து, காஞ்சிபுரம் வந்த அவர் மாங்கால் கூட்ரோடு செல்ல 20ம் தேதி மாலை பஸ் நிலையத்தில் நின்றிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடன் இருந்த நண்பர் பூரன் மண்டல் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்தபோது, தினேஷ் சாந்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தினேஷ் சாந்தி மகன் மகேஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: