திருக்கழுக்குன்றம் பேரூராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு ஓவியப் போட்டி: ஒன்றிய சேர்மன் மற்றும் பேரூராட்சி தலைவர் பரிசுகள் வழங்கினர்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி சார்பில், எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற தலைப்பில் திருக்கழுக்குன்றம் பெண்கள் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த 50 மாணவிகள் கலந்துக் கொண்ட ஓவியப் போட்டி  நடந்தது. இதில், 10 மாணவிகள் வெற்றி பெற்றனர். இந்த மாணவிகளுக்கு கேடயம் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.      

இந்த விழாவில்  சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்ட திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் ஜி.டி.யுவராஜ் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி கேடயங்களை வழங்கினர். பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், பள்ளியின் தலைமையாசிரியை எப்சிபா, பேரூராட்சி கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி, பழனி, விஜயகுமார், பூங்கொடி இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: