வேளாண்மை நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்

ஸ்ரீபெரும்புதூர்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஸ்ரீபெரும்புதூர்  வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் குடியிருப்பு சார்ந்த விழிப்புணர்வு முகாம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் செயல்பாடுகள் கூட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குண்ணம் ஊராட்சியில் உள்ள  உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், குண்ணம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் இலக்கியா பார்த்திபன் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பொதுமக்களிடம் விளக்கி பேசினார். புவி வெப்பமயமாதலை தடுக்க பயிற்சி மற்றும் பயிர் பல வகைப்படுத்துதலின், அவசியத்தின் தொழில் நுட்பங்களை குறித்து மக்களுக்கு விளக்கப்பட்டது. பின்னர், பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் மரக்கன்றுகளின் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பின்னர், மரக்கன்றுகளை பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகளோடு ஒன்றிணைந்து, பள்ளி வளாகத்தில் நடவு செய்தனர். இதில், ஊராட்சி மன்ற துணை தலைவர் கண்ணம்மாள் ஹாரி, வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: