பெண் எம்எல்ஏவை மிரட்டியவர் கைது

ஆம்பூர்: குடியாத்தம் பெண் எம்எல்ஏவை போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த கார் டிரைவரை போலீசார்  கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவை சேர்ந்த அமுலு விஜயன் உள்ளார். இவருக்கு   நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். எம்எல்ஏ போனை எடுத்தவுடன், எதிர் முனையில் பேசிய நபர், பெண் எம்எல்ஏவிடம் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, எம்எல்ஏவின் கணவர் விஜயன் உம்ராபாத் போலீசில் உரிய ஆதாரங்களுடன் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து போனில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரித்தனர். அதில், எம்எல்ஏவை போனில் மிரட்டல் விடுத்த நபர் ஆம்பூர் அருகே உம்ராபாத்  அடுத்த நரியம்பட்டை சேர்ந்த கார் டிரைவரான கதிரவன் (40) என்பது தெரியவந்தது. அவரை நேற்றிரவு கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: