ஆவடி அருகே பரபரப்பு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பெண் தற்கொலை

ஆவடி: கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டதால் பெண் தற்கொலை செய்து கொண்டார். திருநின்றவூரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி பவானி (35). கேட்டரிங் வேலை செய்கிறார். பவானி, தனது கணவருக்கு தெரியாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, திருநின்றவூர், மேட்டு தெருவை சேர்ந்த விஜயலக்ஷ்மி (45) என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார். கடந்த 6 மாதங்களாக பவானி வட்டிகூட தரவில்லை என கூறப்படுகிறது. இதனால், விஜயலக்ஷ்மி, பவானியிடம் பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.  

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், பவானி கடந்த 14ம் தேதி, பூச்சி மருந்து குடித்து விட்டார். கணவர், அவரை மீட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். நேற்றுமுன்தினம் பவானி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயலட்சுமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: