மூதாட்டிகளிடம் 12 சவரன் அபேஸ்

புழல்: மூதாட்டி3 பேரிடம் 12 சவரன் நகை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர். புழல் அடுத்த புத்தகரம் காமராஜர் நகரில் உள்ள நாகாத்தம்மன் கோயில் அருகே புற்று கோயிலில் நேற்று காலை  கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், புத்தாகரம், காமராஜர் நகர், சூரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி காமராஜர் நகரை சேர்ந்த அம்புஜம் (66), சரோஜா (55), மற்றொரு மூதாட்டி ஆகிய 3 பேர் அணிந்திருந்த 12 சவரன் நகைகளை மர்ம நபர்கள் அபேஸ் செய்து சென்றனர்.

Related Stories: