×

எஸ்பிஐ சார்பில் 23 கிராமங்களில் இரவு முகாம்கள்

சென்னை: கிராமப்புற வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களுடன் உள்ள உறவுமுறை மற்றும் பிணைப்பை வலுப்படுத்த, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் 23 கிராமங்களில் பாரத ஸ்டேட் வங்கி இரவு முகாம்களை நடத்தியது. சென்னையின் வட்டார தலைமையகத்திலுள்ள தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா மற்றும் பொது மேலாளர்கள் உள்பட வங்கியின் உயர் நிர்வாகிகள் இந்த இரவு முகாம்களில் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள், தமிழ்நாடு மாநில அரசு அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இதில் பங்கேற்றனர். கடன் தவணைகளை சரியாக செலுத்தி, வங்கியுடன் நீண்ட கால உறவை பேணிவரும் விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர்.

பிரதம மந்திரி ஜீவன் பீமா திட்டம், அடல் பென்ஷன் திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம், முத்ரா கடன்கள் ஆகிய பல்வேறு அரசு திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டன. மாணவர்களை ஊக்குவிக்க, அரசு பள்ளிகளுக்கு எழுதுபொருட்கள், கணினிகள், சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவிலுள்ள பாப்பாபட்டி கிராமத்தில் புதிய ஏடிஎம் துவக்கி வைக்கப்பட்டது.

Tags : SBI , Night camps , 23 villages, SBI
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...