×

பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்: வளர்ச்சி பணிகள் நிறைவேற்ற தீர்மானம்

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.பாலசுப்பிரமணியம், ஜி.சிவக்குமார், மேலாளர் (நிர்வாகம்) பி.அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.யமுனா ரமேஷ், கே.சுரேஷ்குமார், க.பத்மாவதி கண்ணன், லோ.ஜெயஸ்ரீ லோகநாதன், வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, ச.உமாமகேஸ்வரி சங்கர், எம்.சத்யபிரியா முரளிகிருஷ்ணன், எஸ்.பிரியா செல்வம், பி.டில்லிகுமார், வி.கன்னியப்பன், சு.சிவகாமி சுரேஷ், கே.ஜி.டி.கௌதமன், எம்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து பேசும்பொழுது, `எனது ஒன்றிய கவுன்சில் பகுதிக்கு உட்பட்ட குத்தம்பாக்கம் தென்பகுதி, 6வது வார்டு பெருமாள் கோயில் முதல் சமயபுரத்து மாரியம்மன் கோயில் வரை பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்குமாறு நான் வைத்த கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் நேரடியாக வருகை தந்த ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து இந்த சாலையை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். மேலும் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு பேசினார்.

இதற்கு பூவை எம்.ஜெயக்குமார் (ஒன்றியக்குழு தலைவர்) பதிலளிக்கையில், `ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். கூட்டத்தில் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்கள் பகுதிகளிலும் ரூ 1 கோடியே 92 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள், தார் சாலையகள், பேவர் பிளாக், மழைநீர் கால்வாய், கல்வெர்ட்டுகள் அமைப்பதென்றும், மேலும் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த நிர்வாக அனுமதி கேட்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Tags : Poontamalli Union Committee , Poontamalli Union Committee Meeting: Resolution to carry out development works
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்