பெரியபாளையத்தில் பவானி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா

பெரியபாளையம்: ஆடி வெள்ளி சிறப்பு வழிபாட்டில் பெண்கள் அதிக பக்தியுடன் பங்கேற்று தங்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட அம்மனை வழிபடுகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரை பகுதியில் சுயம்பு எழுந்தருளி புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோயில் உள்ளது.  இக்கோயிலில், ஆடி மாத திருவிழா என்பது 14 வார காலம் வெகு விமர்சையாக  நடைபெறும்.

இந்நிலையில் இந்த கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தமிழக மட்டுமல்லாமல் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா  உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சனி, ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் வந்து, வாடகைக்கு விடுதிகளை எடுத்து தங்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை முடி காணிக்கை செலுத்தி கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து  ஆடு, கோழி என பலியிட்டு உடல் முழுவதும் வேப்பிலை ஆடை அணிந்து கையில் தேங்காய் ஏந்தி கோவில் சுற்றி வலம் வந்தனர்.

இந்நிலையில், நேற்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மனுக்கு அதிகாலை பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பெரியபாளையம் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஆயிரம் கணக்கான பெண்கள் அதிகாலை எழுந்து புனித நீராடி மஞ்சள் ஆடை அணிந்து, கையில் வேப்பிலை எடுத்துக்கொண்டு    பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு நீண்ட தூரம் பாதயாத்திரையாக வந்து பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர்.  கோவில் வளாகத்தில் உள்ள புற்றில் பாலை ஊற்றி  நெய் விளக்கு தீபம் ஏற்றி வலம் வந்தனர். பின்னர், மூலவர் பவானி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

Related Stories: