×

ஒரு டோஸ் தடுப்பூசியை கூட 4 கோடி பேர் போடவில்லை: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் இன்னும் 4 கோடி பேர் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை கூட செலுத்தவில்லை என  ஒன்றிய  அமைச்சர் தெரிவித்தார். மக்களவையில் நேற்று  கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் தொடர்பாக எழுத்துபூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு, சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் பதில் அளித்தார். அதில் அவர், ‘ஜூலை 18ம் தேதி வரையில் அரசு தடுப்பூசி மையங்களில் மொத்தம் 178 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரத்து 566 டோஸ் தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன. இது 97.34 சதவீதம். இன்னும் 4 கோடி பேர் ஒரு டோஸ்  கூட செலுத்தவில்லை.

மார்ச் 16ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படுகிறது. 18 வயது முதல் 59 வயதினருக்கு ஏப்.10ம் தேதியில் இருந்து பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் சிறப்பு முகாம் கடந்த 15ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது,’ என்றார்.

Tags : Union Minister , 4 crore people have not received even one dose of vaccine: Union minister informs
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...