×

தேசிய விருதுகளைக் குவித்த சூரரைப் போற்று

டெல்லி: 2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்து வருகிறது. திரைப்படங்களுக்கு உகந்த மாநிலமாக மத்தியப்பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படமாக சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மண்டேலா படத்திற்கு சிறந்த வசனத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைக்கதைக்கான திரைப்படமாக சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சூரரைப்போற்று படத்தில் நடத்த நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது; சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  சிறந்த பின்னணி இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Tags : Kudos to Surer who has accumulated national awards
× RELATED புதுச்சேரி சிறுமி பாலியல்...