கோவை ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தற்கொலை

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ரமணா என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரமணா கொள்ளு என்ற 32 வயது இளைஞர், மன அழுத்தம் காரணமாக கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆறு மாத யோகா பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு ஈஷா மையத்தில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பேரூர் டிஎஸ்பி தலைமையில் ஆலந்துறை காவல்நிலைய போலீசார் ஈஷா யோகா மையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தசூழலில், இளைஞர் தங்கியிருந்த அறையில், கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், இறந்த இளைஞரின் உடல் கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே காவல் துறையினர், தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். இதனிடையே,கோவை ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி பெற்று வந்த நபர் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: