தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர்; தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில் விருதுநகரில் உள்ள வீட்டில் அமைச்சர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

 இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மீண்டும் இன்று அலுவலகத்திற்கு திரும்பி வந்து தனது பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தொற்று உறுதியான நிலையில் அமைச்சர் விருதுநகரில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திகொண்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும்  நிலையில் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.

Related Stories: