×

பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை ஆலோசனை

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கிய நிலையில், தொடர்ந்து 4வது நாட்களாக எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி அவையை முடக்கி வருகின்றன. ஆளுங்கட்சி தரப்பில் எதிர்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகள் தொடர்பாக விவாதங்கள் நடத்த மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதனால் அவையில் புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதும், அதுகுறித்த விவாதங்கள் நடத்துவதிலும் ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் மூத்த அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதர அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, அனுராக் சிங் தாக்கூர், கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகள் குறித்து உரிய பதிலடி கொடுத்தல், புதிய மசோதாக்கள் நிறைவேற்றம், புதிய ஜனாதிபதியாக தேர்வான திரவுபதி முர்மு, வரும் 25ம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags : Union ,Cabinet ,Modi , Union Cabinet meeting chaired by Prime Minister Modi
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...