கொளத்தூர் சோமநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி,  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் இந்து சமய  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி சென்னை, கொளத்தூர் அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூபாய் 10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

கொளத்தூர் அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரெட்ஹில்ஸ் சாலையில் அமைந்துள்ள 7841 சதுர அடி பரப்பிலான இடம் திரு. சாதுல்லா சாயுபு என்பவருக்கு வணிக பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக  வாடகை தொகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்ததால் அவர்மீது சென்னை மண்டல இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பின்படி இன்று  (22.07.2022) காவல்துறை உதவியுடன் வருவாய் துறையினரின் முன்னிலையில் வணிக நிறுவனம் அகற்றபட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.10 கோடி ஆகும். 

Related Stories: