×

நெல்லை காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!!

நெல்லை: நெல்லை  காந்திமதி அம்பாள் உடனுறை  நெல்லையப்பர் திருக்கோவிலில்  ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை காந்திமதியம்பாள் உடனுறை நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் அனைத்து மாதங்களிலும் முக்கிய திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஆனித்தேரோட்டம் அண்மையில் விமர்சியாக  நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர திருநாள் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரம் மற்றும் கும்பத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது.

4ம் திருநாளில் வரும் 25ம் தேதியன்று நண்பகல் 12 மணிக்கு அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியில் இருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதியுலா நடக்கிறது. மொத்தம் பத்து நாட்கள் நடக்கும் இவ்விழாவில் நிறைவு விழாவில், ஆடிப்பூரம் 10ம் திருநாள் 31ம் தேதி இரவு ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 6.30 மணி முதல் 7.30 மணி வரை ஆடிப்பூரம் முளைக்கட்டு திருநாளும், சீமந்தம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.


Tags : Paddy Gandhimathi Ampal Ududya Nelliyapar Tirukovil ,Adipura Festival , Nellai Gandhimati Ambal, Nellaiyapar temple, Aadipura festival
× RELATED ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு...