×

ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற முன்னாள் அமைச்சர்களின் படகு கவிழ்ந்து விபத்து!!

அமராவதி: ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற முன்னாள் அமைச்சர்களின் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. வெள்ளம் இன்னும் வடியாத நிலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ரஜூலு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளை முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசக்கட்சி தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் நேற்று பார்வையிட்டனர். சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசக்கட்சி தலைவர்கள் ஒரு படகிலும், முன்னாள் அமைச்சர்கள் மற்றொரு படகில் பயணம் செய்தனர். அயோத்தியலங்காவிலிருந்து சோம்பள்ளி கிராமத்தை நோக்கி முன்னாள் அமைச்சா்கள் சென்ற படகு கரையை நெருக்கிய போது பாரம் தாங்காமல் கவிழிந்தது.

அப்போது, பாதுகாப்பு உடை அணியாமல் சென்ற முன்னாள் அமைச்சர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். முன்னாள் அமைச்சர்கள் டேவினேரி உமாமகேஸ்வரராவ், பிடானி சத்யநாராயணா, தெலுங்கு தேசக்கட்சி தலைவர்கள் ராமகிருஷ்ணா, ராமுகன், ராம்ராஜு ஆகியவர்கள் கோதாவரி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கின்னர். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மீனவர்கள் உடனடியாக அவர்களிடம் இருந்த லைப்ஜாக்கெட் வீசி தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். படகு கவிழ்ந்த இடத்தில் 4 ஆடி மட்டுமே ஆழம் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மற்றொரு படகில் பாதுகாப்பாக சென்ற முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கரையை அடைந்து கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.  



Tags : Andhra Pradesh , In Andhra, floods, to visit, minister's, boat, overturned, accident
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி